வேட்மனுக்கள் மீது நாளை பரிசீலனை! ஈரோடு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக விலகியதால் 4 முனை போட்டி நிலவுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று நிறைவு பெற்றது. கடந்த 3-ம் தேதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் உட்பட 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 4-ம் தேதி 10 சுயேச்சை வேட்பாளர்களும், நேற்று (பிப்.6) நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இன்று இபிஎஸ் தரப்பு அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை மொத்தம் 75க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால் இடைத்தேர்தலில் இருந்து விலகுகிறோம் என அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். இதனால், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், தேமுதிக என 4 முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், இடைத்தேர்தளுக்கான தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான நாளை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும். பிப்ரவரி 10ம் தேதி அன்றே பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இதன்பின், 27ம் தேதி ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment