தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்.! கருப்பு உடையில் காங்கிரஸ் உறுப்பினர்கள்.!

இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு வரும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அண்மையில் சூரத் நீதிமன்றம், பிரதமர் மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை தொடர்ந்து, அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது . எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காங்கிரஸ் போராட்டம் :

ராகுல்காந்தி, குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கும், அவர் எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

கருப்பு உடை :

இன்று தமிழக சட்டபேரவை வரும் காங்கிரஸ்கட்சி உறுப்பினர்கள், ராகுல் காநிதியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெருவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து பங்கேற்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை நிகழ்வு :

2 நாள் விடுமுறையை அடுத்து இன்று பொது மற்றும் வேளாண் பட்ஜெட் அறிக்கை மீதான விவாதங்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது குறிப்பித்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment