வயலில் இறங்கி வேலை செய்த எம்.எல்.ஏ மனோகர் ரந்தாரி- குவியும் பாராட்டுக்கள்!

தனக்கு சொந்தமான நிலத்தில் தன் மனைவியுடன் உழவு வேலை செய்துவரும் ஒடிசாவின் எம்எல்ஏ மனோகர் ரந்தாரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் தற்பொழுது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதள ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் உள்ள நபரங்கப்பூர் மாவட்டத்தின் தொகுதியில் பிஜூ ஜனதாதள எம்எல்ஏவாக இருப்பவர் தான் மனோகர் ரந்தாரி. சமீபத்தில் ஒடிசா முழுவதும் கனமழை பெய்ததைடுத்து விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்எல்ஏ மனோகர் ரந்தாரி தனக்கு சொந்தமான 25 ஏக்கர் பண்ணை நிலத்தில் கடந்த சில நாட்களாக மனைவியுடன் இணைந்து உழவு செய்து வருகிறார். அவரது மனைவி அரசு ஊழியராக இருந்தாலும் அவருடன் காலை ஐந்து மணிக்கே வயலுக்குச் செல்லும் எம்எல்ஏ, காலை 10 மணி வரை மனைவியுடன் சேர்ந்து வயலில் உழவு பணிகளை செய்து வருகிறார்.

அதன் பின் மனைவி அலுவலகத்திற்கு சென்றதும் எம்எல்ஏ மதியம் 12 மணிவரை உழவு வேலை செய்து விட்டு வீடு திரும்பி விடுகிறார். தனது நிலத்தில் தானே உழவு வேலை செய்யும் எம்எல்ஏ மனோகர் ரந்தாரியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இதுகுறித்து எம்எல்ஏ மனோகர் ரந்தாரி கூறுகையில், சிறுவயதில் இருந்து விவசாய பணிகளை தான் செய்து வருகிறேன். எம்எல்ஏ ஆவதற்கு முன்பே எனது நிலத்தில் நானே உழுது வந்தேன். எனக்கு விவசாயம் தொழில் தான் ஆண்டுதோறும் நெல் மற்றும் சோளம் பயிரிடுவதன் மூலம் ஏழு லட்ச ரூபாயை ஈட்டித் தருகிறது. விவசாயம் வளர்ச்சி அடைந்தால் தான் நாட்டில் பட்டினியும் குறையும். எனவே இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.

author avatar
Rebekal