இசையமைப்பாளர் டி.இமானின் தயார் காலமானார்..!!

இசையமைப்பாளர் டி.இமான் தயார் காலமான செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி இமான் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடைசியாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்தார் அதில் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது குறிப்பாக கண்ணான கண்ணே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில், இசையமைப்பாளர் டி.இமானின் தயார் காலமானார். இந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டி.இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது “இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள். அவர் பிறந்த நாளைக்கு பிறகு (மே 23) இது நடந்துள்ளது. கடந்த 2008, மே 23-ஆம் தேதி என் கண்கள் கண்ணீரில் திரண்டிருந்தன. அவர் கோமா நிலையில் இருந்தார். நான் அவருக்கு முன் ஒரு கேக்கை வெட்டினேன், அந்த மருத்துவமனை ஐ.சி.யுவில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். என் வாழ்நாளில் நான் அவரை வாழ்த்தும் கடைசி வாழ்த்தாக தெரியாது.எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்வீர்கள் என்று என்று எனக்கு வலுவான நம்பிக்கை இருந்தது விரைவில் திரும்பி வாருங்கள்”  என்று தெரிவித்துள்ளார். டி இமானின் தயார் மறைவுக்கு பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.