ஊழல் செய்ததாக புகார் – சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு

பிப்ரவரி மாதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க கலையரசன் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.அவர் மீது இது குறித்து புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்ற நிலையில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு ஆவணங்களை நீதிபதியிடம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விசாரணை பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.