கோவை மக்களவை தொகுதியில் போட்டியா..? மநீம தலைவர் கமல்ஹாசன் பதில்.!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தங்களது கட்சியின் நிர்வாகிகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.  நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கமல்ஹாசனின்  தலைமையில் “2024 பாராளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்” என்ற பெயரில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுவீர்களா ..? என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் ” ‘நல்ல எண்ணம்தானே’ என்று பதில் அளித்ததார்.

அதனை தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் ” தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச இன்னும் நேரம் உள்ளது. தற்போது கட்சி வளர்ச்சி குறித்துதான் சிந்திக்க வேண்டும்.வரும் மக்களவைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை” என கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.