அன்னாசி பழத்தின் அளவில்லா நன்மைகள் அறிவோம் வாருங்கள்!

இயற்கை நமக்கு கொடுத்துள்ள வாரங்களில் ஒன்றான பழங்கள்  இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான சத்துக்களை நமக்கு தெரியாமலே கொடுக்கக் கூடியவை. அன்னாசிபழம் அட்டகாசமான சுவை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதிலுள்ள அளவிலான நன்மைகள் பலரும் அறியாதது. அவை பற்றி அறிவோம் வாருங்கள்.

அன்னாசி பழத்தின் நன்மைகள் 

அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் பொருள் மூட்டுகளில் ஏற்படக்கூடிய தேய்மானம் மற்றும் வலியினை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை கொடுப்பதுடன் இப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையால் நோயெதிர்ப்பு மண்டலத்தை முழுவதுமாக வலுவடைய செய்கிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின்-சி காரணமாக காயங்கள் விரைவில் ஆற துணை செய்கிறது. இப்பழத்தில் அதிகப்படியான கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளதால் எலும்புகளின் வலிமையை அதிகரித்து, நல்ல ரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது.

அன்னாசிப்பழம் நார்ச்சத்து நிறைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது. எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் தடுத்து, நம் ஜீரண மண்டலத்தை வலிமைப்படுத்தி குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் நிச்சயம் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து இருதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பொட்டாசியம் அதிகம் இந்த பழத்தில் இருப்பதால் இப்பழத்தை உண்டு வருபவர்களுக்கு ரத்த அழுத்தம் எப்பொழுதும் கட்டுக்குள் இருக்கும். மேலும் ரத்த அழுத்தத்தினால் நோய்வாய்ப்பட்டு உள்ளவர்கள் விரைவில் குணமடையலாம். வைட்டமின் ஏ சத்து இதில் நிறைந்துள்ளதால் கண்பார்வை குறைபாடு நீங்கி ,மாலைக்கண் மற்றும் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் குணமடைய அன்னாசி பழம் உதவுகிறது.

author avatar
Rebekal