அரியர் வழக்கு – மாணவர்கள் வழக்கு விசாரணை நிறுத்தம்

அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன் லைன் விசாரணையில் லாக் இன் செய்ததால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், யூஜிசி  தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.இந்த விசாரணை ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.எனவே அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கான  மாணவர்கள் ஆன்லைன் விசாரணையில்  Log In செய்ததால் இடையூறு ஏற்பட்டது.இதனால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது.மாணவர்களின் பேச்சு.ஒலி உள்ளிட்ட காரணங்களால் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .அப்பொழுது விசாரணையில் இருந்த நீதிபதிகள்,  மாணவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

 

 

 

.