காமராஜர் இல்லத்தில் தங்களுக்கான தண்டனையை செவ்வனே செய்து வரும் மாணவர்கள்!

சில தினங்களுக்கு முன்னர் மதுரை கிளை உயர்நீதிமன்றம்,  தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பறையில் மது அருந்தியதால் கல்லூரியை விட்டு இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் கல்லூரி சேர்க்கப்பட மறுத்துவிட்டது.இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த  வழக்கில்,

குற்றம் சாட்டப்பட்ட 8 மாணவர்களுக்கும், விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்து., மாலை மது குடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நூதன தண்டனையை குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களின் கல்லூரியில்  இருந்து ஒரு உதவி பேராசிரியர் கண்காணித்து, தலைமை பேராசிரியரிடம் இந்த தகவல் அறிக்கை கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த நூதன தண்டனையை இன்று  குற்றம் சாட்டப்பட்ட 8 மாணவர்களும் செய்தனர். விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தினை காலை 10 மணி முதல் செய்துகொண்டிருக்கின்றனர். மாலை மது விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.