அதிமுக ஆதரவு வேட்பாளரின் வெற்றி செல்லும்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

2019இல் கோவை, சின்ன தடாகம் ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி என கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு. 

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் சின்ன தடாகம் ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்ப்பில் சௌந்தர வடிவு மற்றும் திமுக ஆதரவுடன் சுதா ஆகியோர் போட்டியிட்டு இருந்தனர். இதில் முதலில் திமுக வேட்பாளர் சுதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பின்னர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக வேட்பாளர் சௌந்தர வடிவு வெற்றியை எதிர்த்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் திமுக ஆதரவு வேட்பாளர் சுதா வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த கோரிக்கையினை ஏற்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று கோவை மாவட்ட நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை சரிபார்த்த நீதிபதி அமர்வு, அதிமுக ஆதரவு வேட்பாளர் சௌந்தர வடிவு 2 வாக்குகள் அதிகமாக உள்ளதால் அவரது வெற்றி செல்லும் என தீர்ப்பளித்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment