கோவை கார் விபத்து.! 75 கிலோ வேதிப்பொருட்கள் பறிமுதல்.! காவல் ஆணையர் தகவல்.! 

கோவை கார் வெடிவிபத்து சம்பவத்தை தொடர்ந்து  சல்பர் , பொட்டாசியம் போன்ற 75 கிலோ வேதிப்பொருட்கள் மொத்தமாக முபின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்ப்பட்டன. கோவை காவல் ஆணையர் தகவல். 

கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்பில் இருந்ததாக, ஜமேசா முபின் நண்பர்கள்  முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் எனும் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார்.  அவர் கூறுகையில், ‘ இந்த கூட்டுசதியில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என தொடர்ந்து விசாரித்து வருகின்றோம். கைது செய்யப்பட்ட ஒரு சிலர் அண்மையில் கேரளா சென்று வந்துள்ளனர்.

உபா சட்டத்தின் கீழ் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து நிறைய யுகங்கள் உலவி வருகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் சிலரிடம் 2019ஆம் ஆண்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சிசிடிவி கேமிராக்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். வெடித்த காரில் 2 எல்பிஜி சிலிண்டர் மற்றும் 3 சிறிய டிரம் காருக்குள்ளே இருந்துள்ளது. 3 நபர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்யப்பட்டனர் அவர்கள் முபீன் வீட்டில் இருந்து சில பொருட்களை வெளியே கொண்டுவந்துள்ளனர். மேற்கண்ட சம்பவத்தை தொடர்ந்து  சல்பர் , பொட்டாசியம் போன்ற 75 கிலோ வேதிப்பொருட்கள் மொத்தமாக முபின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்ப்பட்டன. கோவையில் 11 செக் போஸ்ட் இருக்கிறது இது போக மேலும் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment