கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு தேவை – ஓபிஎஸ்

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் அறிக்கை.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான வேட்டி-சேலை வழங்கும் திட்டம் ஆகிய அரசுத் திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, நெசவாளர் சங்கங்களுக்கு சந்தைப்படுத்துவதில் உறுதுணையாக இருந்து கைத்தறி ரங்கங்களை பிரபலப்படுத்துதல்.

வாடிக்கையாளர்களாக மாறிவரும் இரசனைக்கேற்ப பாரம்பரியம் மற்றும் நவீன ரகங்களை உருவாக்குதல், பல்வேறு வகையிலான புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துதல், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனமாக ‘கோ-ஆப்டெக்ஸ்’ என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் விளங்குகிறது.

கைத்தறித் துறைக்கு தன்னிகரற்ற பங்களிப்பை அளித்து வருவதோடு, நெசவாளர்களுக்கு நீடித்த வேலைவாய்ப்பினை வழங்கி வரும் இந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், தன்னுடன் இணைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்ளால் உற்பத்தி செய்யப்படுகின்ற துணிகளை நாடு முழுவதும் பரவியுள்ள தன்னுடைய நூற்றுக்கணக்கான கிளைகள் மூலமாக விற்பனை செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

எனவே, பல விற்பனையகங்களில் கழிப்பிட வசதிகள் இல்லை என்றும், தற்காலிக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், சில அதிகாரிகள் பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், விற்பனையில் சரிவை ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்குத் தீர்வு காணும் வகையில், முதலமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்பதால், வரும் 5-ஆம் தேதி கோ-ஆப்டெக்ஸ் தலைமையகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கும் தீர்வு காணப்படவில்லையென்றால், வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதைத் தவிர தங்களுக்கு வேறுவழியில்லை என்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுடைய கோரிக்கைகளில் நிதி தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இல்லாத சூழ்நிலையில், அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதும், அவர்களுடைய போராட்ட அறிவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் மாநில அரசின் கடமை.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுடைய பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு காண தொடர்புடைய அமைச்சருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

25 mins ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

36 mins ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

2 hours ago

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

9 hours ago

‘ஐ ஆம் நாட் கிழவன் ..சீனியர் யூத்’ ..! 103 வயது சிஎஸ்கே ரசிகரின் வைரலாகும் வீடியோ !!

CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…

10 hours ago

வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65…

11 hours ago