7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.!ட்விட்டை நீக்கியது ஏன்..? முதலமைச்சர் விளக்கம்

7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.!முதலமைச்சர் பழனிசாமி என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்விகள் கேட்கப்பட்டதுஅதற்கு பதில் அளித்த முதல்வர் தண்ணீர் தட்டுப்பாடுகளை கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது பருவமழை பெய்யாததால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை சரிசெய்து மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க தேவையானநிதி ஒதுக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
மேலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.ஆட்சியர்களும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
மும்மொழி கொள்கை பற்றி கேள்வி எழுப்பபட்டது..?அதற்கு பதிலளித்த முதல்வர்
மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது கூறினேன்? தமிழை பிற மாநிலங்களில் பயிற்றுவிக்க வேண்டும் என்றுதான் ட்விட்டரில் பதிவிட்டேன் பின்னர் அதனை சர்ச்சையாக்கியதால் நீக்கினேன் என்று கூறினார்.
பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் கோரிக்கை வைத்ததால் தான், பிற மாநிலங்களில் தமிழை விருப்ப பாடமாக வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன் நான் விடுத்த கோரிக்கையில் என்ன தவறு உள்ளது? என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கர்நாடக அரசை ராகுல் காந்தி வலியுறுத்தாதது ஏன்? தமிழகத்திற்கு நீர் திறக்க திமுக எம்பிக்கள் கர்நாடக அரசை வலியுறுத்துவார்கள் என நம்புகிறேன்
மேலும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில், தான் பிரதமரானதும் காவிரி ஆணையத்தை கலைப்பதாக ராகுல்காந்தி கூறினார், இதனை இங்குள்ள கட்சிகள் கண்டிக்கவில்லை தமிழகத்திற்கான பங்கு நீரை பெற திமுக, காங்கிரஸ் நடவடிக்கை தேவை உள்ளது.
திமுக 7 பேர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது, அவர்களை விடுவிக்கக் கூடாது என திமுக அமைச்சரவையில் தீர்மானம் போட்டது.அதிமுக   அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது, அரசின் நிலைப்பாடு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.
 

author avatar
kavitha