வரும் மார்ச் 25ஆம் தேதி 26 இலட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா… முதல்வர் அதிரடி முடிவு…

நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் வரும் உகாதி தினத்தன்று  26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைகள் பட்டாவுடன் சேர்த்து வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.  வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு   செய்தித்துறை  அமைச்சர் பேர்னி நானி   கூறியதாவது,  உகாதி தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள  26 லட்சம் ஏழை மக்களுக்கு வீட்டுமனைகள் பட்டாவுடன் சேர்த்து வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீட்டு மனைகளில் வீடு கட்டிக் கொள்ளவும் ஐந்து ஆண்டுகள் வரை வங்கியில் அடமானம் வைத்து கொள்ளவும்,  ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்து கொள்வதற்கான உரிமையுடன் கூடிய பட்டா வழங்கப்படும். வீட்டு மனைக்காக 43,141 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  இதில் 26,976 ஏக்கர் அரசு நிலமும், 16,164 ஏக்கர் தனியார் நிலத்தை அரசு விலைக்கு வாங்கி உள்ளது. போர்கால அடிப்படையில் இந்த இடங்கள் லேஅவுட் அமைத்து வழங்கப்படும். இந்த இடத்திற்கு   ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா காலனிகள் என்று பெயரிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Kaliraj