#CinemaBreaking: வித்தியாசமான கதையில் வித்தியாசமான தோற்றம்…. விக்ரம் பிரபுவின் “டாணாக்காரன்”..!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் டாணாக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர்  விக்ரம் பிரபு இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில்  “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.