#CinemaBreaking: ஆர்.ஆர். ஆர் படத்தின் “சீதா” கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!!

ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியா பட் நடிக்கும் சீதா கதாபாத்திரத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இன்று நடிகை ஆலியா பட்டிற்கு 28 வது பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட்டரில் கொண்டடி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆர் ஆர் ஆர் படக்குழு அவர் நடித்துள்ள சீதா கதாபாத்திரத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.