தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என சிஐஐ கோரிக்கை !

தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என சிஐஐ கோரிக்கை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது தனது தீவிர தாக்குதலை நடத்தி, மக்களை அச்சத்தின் ஆழத்திற்கு  சென்றுள்ளது. இதனையடுத்து,  இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரஸை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவால், மாக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகிறது. இதனையடுத்து, சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பான, சிஐஐ கேட்டுக் கொண்டுள்ளது. 

மேலும், ஊரடங்கு உத்தரவால், தொழில் நிருவண்ணார்கள் முடக்கப்பட்டுள்ளது, பொருளாதார ரீதியாக மிகப் பெரிய தர்க்கத்தை ஏற்படும் என சிஐஐ கணித்துள்ளது. இத்தகைய சூழலில், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஜன் தன் வங்கி கணக்கு வாடிக்கையாளர்களுக்கு, ரூ.2 லட்சம் கோடி வழங்க வேண்டும் என்றும் சிஐஐ பரிந்துரைத்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.