முள்ளங்கியில் சட்னியா….? எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்!

முள்ளங்கி என்றாலே பலருக்கு பிடிக்காது. காரணம் அதன் மணம் தான். மேலும், முள்ளங்கியில் அவ்வளவாக சுவையும் இருக்காது. ஆனால் முள்ளங்கியில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த நாம் சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த முள்ளங்கி பெரிதும் உதவுகிறது. இந்த முள்ளங்கி வைத்து எப்படி சட்னி செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • முள்ளங்கி
  • தக்காளி
  • வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • புளி
  • உளுந்தம் பருப்பு
  • பூண்டு
  • கடுகு
  • கருவேப்பில்லை
  • எண்ணெய்

செய்முறை

வதக்க : முதலில் முள்ளங்கி சட்னி செய்வதற்கு தக்காளி, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரைக்க : அதன் பின் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து கொண்டு, அதனுடன் சிறிதளவு உப்பு மட்டும் புளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தாளிக்க : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பின் அரைத்து வைத்துள்ள கலவையை இதனுடன் கொட்டி கிளறி, சிறிது நேரம் கழித்து இறக்கிவிடவும். அவ்வளவு தான் அட்டகாசமான முள்ளங்கி சட்னி தயார்.

author avatar
Rebekal