ஐ.நா கொடுத்த காலத்துக்கு முன்பே சீனா வறுமையை ஒழித்து சாதனை படைத்து விட்டது – சீன அதிபர்!

ஐ.நா கொடுத்த காலத்துக்கு முன்பதாகவே சீனா வறுமையை ஒழித்து சாதனை படைத்து விட்டது என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் முழுமையாக வறுமை ஒழக்க போராடியவர்கள் மற்றும் நாட்டில் வறுமையை ஒழித்து சாதனை புரிந்தவர்களுக்கும் விருது மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் சீனாவில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தின் மூலம் வறுமையை ஒழித்து தற்பொழுது வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஏழை மக்களையும் வறுமையில் இருந்து மீட்டு உள்ளதாகவும், இதனால் 170 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் முழுமையான வெற்றியை சீன கண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், 2030ஆம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என ஐநா தங்களுக்கு காலக்கெடு நிர்ணயித்தது. ஆனால் ஐநாவின் காலக்கெடுவுக்கு 10 ஆண்டுகள் முன்னதாகவே வறுமையை ஒழித்து தாங்கள் புது சரித்திரம் படைத்து அதிசயத்தை நிகழ்த்தி உள்ளதாகவும் அதிபர் ஜி ஜின்பிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal