,

குழந்தை திருமணம்: 46 வயது மணமகன், 14 வயது மணமகளின் பெற்றோர் கைது..

By

பெங்களூரு யெலஹங்காவில் குழந்தை திருமணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 46 வயது ஆண் மற்றும் 14 வயது சிறுமியின் பெற்றோரை கைது செய்துள்ளதாக கர்நாடக போலீசார் இன்று தெரிவித்தனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி, குழந்தைகள் நலக் குழுவின் காவலுக்கு அனுப்பப்பட்டு, தற்போது பெங்களூரு வில்சன் கார்டனில் உள்ள பெண்களுக்கான அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை ‘திருமணம்’ செய்தவர் சிக்கபெத்தஹள்ளியைச் சேர்ந்த நில உரிமையாளர் என்.குருபிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் தினக்கூலி தொழிலாளர்கள். மணமகன் குருபிரசாத் சிறுமியின் பெற்றோரிடம் 15,000 ரூபாய் பணம் கொடுத்து சிறுமியை திருமணம் செய்துக்கொண்டதாக போலீசார் விளக்கமளித்தனர்.

தமக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகவும், வறுமையின் காரணமாக 14 வயது குழந்தைக்கு 46 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் பெற்றோர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்நாடகாவில் குழந்தை திருமண வழக்குகள் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், 296 குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன. 2018-19ல் கர்நாடகாவில் 119 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.

Dinasuvadu Media @2023