மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு.!

அதிமாக மழை பெய்து வரும் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

மயிலாடுதுறை , கடலூர் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், அதிமாக மழை பெய்து வரும் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், கனமழையால் வரும் சவால்களை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment