ஒரு லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஒரு லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பயன்கள் வழங்குதல் திட்டத்தை தொடங்கி  வைத்தார் முதல்வர். 

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” விழா நடைபெற்று வருகிறது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதன்பின், “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” விழாவில், புதிதாக ஒரு லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதன்படி, 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அடையாளமாக சுமார் 15 பேருக்கு ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1 லட்சம் பேருக்கு வழங்குவதன் மூலம் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 35.8 லட்சமாக உயருகிறது.

மேலும், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்