கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் !முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நிபா வைரசானது வேகமாக பரவி வருகிறது. நிபா வைரஸ் என்பது வௌவால்களின் எச்சங்கள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும்.
இந்த ஆண்டும் கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் பலருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் கேரளாவில் உள்ள கொச்சிக்கு 6 பேர் கொண்ட மத்திய குழு வந்துள்ளது.மேலும் இது தொடர்பாக வதந்திகள் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்த உள்ளார்.