அரியலூரில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

அரியலூரில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.

திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக 3,575 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் மத்திய அரசின் பங்களிப்பாக 60 சதவீத நிதியும், மாநில அரசின் பங்களிப்பாக 40 சதவீத நிதியும் வழங்குகிறது.இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் புதியதாக கட்ட உள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. அரியலூர் தெற்கு கிராம பகுதியில் 10.83 ஹெக்டர் நிலப்பரப்பில் ரூ.347 கோடியில்   புதியதாக அமைகிறது மருத்துவமனை.