43 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.120.23 கோடி மதிப்பில் 43 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று சென்றுள்ளார்.தற்போது ரூ.120.23 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.120.23 கோடி மதிப்பில் 43 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்.மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ரூ.742.52 கோடியில் வளர்ச்சிப்பணிகள்’ 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட ரூ.291 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.