31.1 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

தலைவர்களின் திருவுருவச் சிலைகளை திருந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் ரூ.66 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனார் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கும், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கும், 66 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உத்தமத் தியாகி ஈரோடு ஈஸ்வரன் அவர்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.ப.சுப்பராயன் அவர்களுக்கும் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு அடிக்கல்  நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் திரு. எஸ். இரகுபதி, செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு. த. மோகன், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.