நீதிபதி ஓய்வு.. பாகிஸ்தான் கவிஞரின் கவிதையை சுட்டி காட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.!

உச்சநீதிமன்ற நீதிபதி  எம்.ஆர்.ஷா ஓய்வு பெறுவதை ஒட்டி நடைபெற்ற விழாவில் பாகிஸ்தான் கவிஞரின் கவிதையை சுட்டி காட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரஷூட் பேசினார். 

உச்சநீதிமன்ற நீதிபதியாக 2018 முதல் பொறுப்பில் இருக்கும் நீதிபதி எம்.ஆர்.ஷா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதற்காக வழியனுப்பும் விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரஷூட் கலந்துகொண்டார்.

அப்போது நீதிபதி ஷா பற்றி கூறுகையில், பாகிஸ்தான் கவிஞர் ஒபைதுல்லா அலீ எழுதிய கவிதையாய் சுட்டி காட்டி பேசினார். அந்த கவிதையில், உங்கள் கண்களை (நீதிமன்றத்தை) விட்டு எங்கு செல்வீர்கள்? நீங்கள் இல்லாமல் நாங்கள் உங்களை மிகவும் இழக்கிறோம். என பொருள் படும் ஹிந்தி கவிதையை குறிப்பிட்டு வழியனுப்பு செய்தியை குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.