வேப்பிலையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தலைமை தகவல் ஆணையர்….!

தஞ்சாவூரில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பொது தகவல் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள, சென்ற தலைமை தகவல் ஆணையர்.

கொரோனா வைராசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தடுப்பூசி போடுவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூரில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பொது தகவல் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநில தலைமை தகவல்  ஆணையருமான ராஜகோபால் வந்தார்.

அப்போது அவர், இயற்கையான கிருமிநாசினி என கூறப்படும் வேப்பிலையுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளார். ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் போதும், அவர் வேப்பிலையுடன் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.