சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் சென்னை ஐ.ஐ.டி.!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அந்த தரவரிசை பட்டியலில் சிறந்த முறையில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் சென்னை ஐஐடி சிறந்து விளங்கியதால், முதலிடம் பிடித்துள்ளது.

அதனை தொடர்ந்து, ஐஐஎஸ்சி பெங்களூரு மற்றும் ஐஐடி டெல்லி ஆகியவை இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளது.