பா.ரஞ்சித்தின் அடுத்த படத்திலும் சார்பட்டா மாரியம்மாள்.??

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடிகை துஷ்ரா விஜயன்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

தமிழ் சினிமாவில், அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, காலா ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமாகுமார், சஞ்சனா நடராஜன், மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் நடித்தவர்களின் அணைத்து கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் காதல் கதையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். படத்திற்கு நட்சத்திரம் நகர்கிறது என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தை பற்றி கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடிகை துஷ்ரா விஜயன்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.