தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி விநியோகத்தில் மாற்றமா ? அமைச்சர் காமராஜ் விளக்கம்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

குடிமை பொருள் வழங்கல் கழகம் தமிழகத்தில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை நடத்தி வருகிறது.இதனிடையே இன்று காலை   தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. ஒருநபர் அட்டைக்கு 12 கிலோவில் இருந்து 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவில் இருந்து 12 கிலோவாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்  விளக்கம் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது.ஒரு நபர், 2 பேர் குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி குறைக்கப்படவில்லை என்று  தெரிவித்துள்ளார்.