பொறியியல் கலந்தாய்வில் வருகிறது மாற்றம் – சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை என அமைச்சர் தகவல்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது, கேள்வி – பதில் நேரத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வை சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை செய்து வருவதாக தெரிவித்தார்.

ஆன்லைன் கலந்தாய்வில் குளறுபடி நடைபெற்றதால் நேரடி கலந்தாய்வு நடத்த பரிசீலிக்கப்படும் என்றும் ஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் நிலவும் குளறுபடிகளை களைந்து, வரும் ஆண்டுகளில் கலந்தாய்வை நல்ல முறையில் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். எனவே, பொறியியல் கலந்தாய்வில் விரைவில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்