இந்த இரண்டு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டத்தில் நெல்லை,குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

வெப்பசலனம் காரணமாக நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 20 மணி நேரத்தில் தொழலாம் தேவாலாவில்-9 செ.மீ ,சீத்தார்- 8செ.மீ மழைப்பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தற்போது அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல், தற்பொழுது மும்பையில் உள்ள அலிபாக் அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. மேலும், 138 ஆண்டுகளுக்கு பின் மும்பையில் புயல் தாக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.