காலி பணியிடங்களை நிரப்ப எந்தவித தடையும் இல்லை.! – மத்திய அரசு விளக்கம்.!

காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்கள் வழக்கம்போல நிரப்பப்படும். புதிய பணிகள் மத்திய அரசின் அனுமதி பெற்றுதான் உருவாக்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், அவசரகால நிதி மற்றும் பொருளாதார சுமையை சமாளிக்க அரசு செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும். எனவும், மத்திய அரசின் அனுமதி இன்றி புதிய பணியிடங்களை உருவாக்க கூடாது எனவும், மத்திய அரசு அலுவலகங்களில் செலவினங்களை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பல்வேறு விவாதங்களை கிளப்பின.மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘ இந்த புதிய நெறிமுறைகளானது, இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் செயலாகும். எனவும், மத்திய அரசானது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது எனவும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய நிதி அமைச்சகமானது, விளக்கம் அளித்துள்ளது. அதாவது, காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்கள் வழக்கம்போல நிரப்பப்படும். புதிய பணியிடங்கள் தான் உருவாக்கப்படாது எனவும், யு.பி.எஸ்.சி போன்ற மத்திய அரசின் தேர்வுகள் மூலமாக காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.