போலி மருத்துவர்களுக்கு ஆப்பு.! டாக்டர்கள் ‘அடையாள எண்’-ஐ அறிமுகப்படுத்த போகும் மத்திய அரசு.!

பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு அடையாள எண்-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதில் மருத்துவர்களின் முழு விவரமும் இருக்கும். 

நாட்டில் பல்வேறு இடங்களில் போலி மருத்துவர்ககள் அவ்வப்போது சோதனையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனை முழுதாக தடுக்க மருத்துவர்கள் அவர்களுக்கான மருத்துவ சான்றிதழை வைத்திருந்தாலும், தற்போது மத்திய அரசு புதிய வழிமுறையும் அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி, நாட்டில் மருத்துவ பயிற்சி பெற்ற அனைவருக்கும் அடையாள எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அடையாள எண்ணை கொண்டு உண்மையான மருத்துவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். அந்த அடையாள எண்ணில், அவர்கள் எங்கே, எப்போது மருத்துவம் பயின்றார்கள், அவர்கள் எந்த துறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்ற அனைத்து தரவுகளும் அதில் பதியப்பட்டு இருக்கும். இந்த அடையாள எண்ணானது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் செயல்பாட்டில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.