சீன நிறுவன டெண்டர்களை ரத்து செய்ய மத்திய அரசு திட்டம்..?

ஒரு மாத காலமாக இந்திய, சீன  எல்லைக்குட்பட்ட பதற்றம் நிலவி வருகிறது.கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவியதால் இரு நாட்டு வீரர்களும் எல்லையில் வீரர்களை குவித்தனர். பின்னர், அதிகாரிகள் மட்டங்களில் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

ஆனாலும், சில பகுதிகளில் இருந்து சீனா தங்களது படைகளை நீக்கவில்லை. இதற்கிடையில், இந்தியாவில் கடந்த மாதம் இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், சீன பொருளாதாரத்திற்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின்  டெண்டர்களை சீன நிறுவனங்களுக்கு எடுப்பதை தடை செய்யும் வகையில் தொழில் துறையிடம் பதிவு செய்தால்  மட்டுமே டெண்டரில் கலந்து கொள்ள முடியும் என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும்.

ஏற்கனவே டெண்டரில் பங்கேற்க பதிவு செய்து அதில் சீன நிறுவனங்கள் பங்கேற்று இருந்தாலும் டெண்டர் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது..? அவ்வாறு செய்வது திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் என்பதால் சீன நிறுவனங்கள் பங்கேற்றதற்காக டெண்டரை ரத்து செய்யப்படாது, என்றும் ஒப்பந்தங்கள் சீன நிறுவனத்திற்கு கிடைக்கும் நிலையில் இருந்தால் மட்டுமே ரத்து செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan