ஆதார் எண்களை கையாள 22 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி.!

ஆதார் எண்ணை கையாள 22 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதார் எண் விவரங்களளை தனியார் நிறுவனங்கள், அரசின் குறிப்பிட்ட சலுகைகளுக்கு  சரிபார்க்கும்படியான வாய்ப்பை கையாள மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையிலும் அரசு நடவடிக்கை தொடர்ந்தது.

தற்போது முதற்கட்டமாக, 22 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, 22 நிதி நிறுவனங்கள் ஆதார் எண்ணை சரிபார்ப்பு பணிகளுக்கு மேற்கொள்ள நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது .இதன்படி, இந்த உத்தரவின்படி கீழ்கண்ட நிறுவனங்கள் தங்கள் ஆதார் எண்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் விவரங்களையும் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனங்களில் Amazon Pay, Hero FinCorp மற்றும் Godrej Finance ஆகியவை ஆகும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.