அந்த விஷயத்தில் கமலை கொண்டாடிய அளவுக்கு ரஜினியை கொண்டாடல! மேடையில் வருத்தப்பட்ட பிரித்விராஜ்.!

இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் நடித்துள்ள திரைப்படம் “கடுவா”. இந்த படம் வரும் 30-ஆம் தேதி நாளை வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் ஜூலை 7 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில், பிருத்விராஜ் , ஷாஜி கைலாஸ்  மேலும் பலர் கலந்து கொண்டார்கள். அப்போது பிருத்விராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர்” ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரை வைத்து ஒரு முழு நீள காமெடி படத்தில் பார்க்க ரசிகனாக எனக்கு ஆசை உள்ளது. காமெடி சென்ஸுக்காக கமலை கொண்டாடிய அளவுக்கு ரஜினியை நாம கொண்டாடவில்லை. எனவே, எனக்கு ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால், அவரை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்குவேன்.

கமல் சாரின் “பஞ்சதந்திரம்” படத்தைப்போல ரஜினிசாரை வைத்து ஒரு காமெடி படம் இயக்க ஆசை என” கூறியுள்ளார். மேலும் பிரிதிவ்ராஜ். லூசிபர், ப்ரோ டாடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment