#FACTCHECK: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு ?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் குறித்து  வெளியான தகவல்

By leena | Published: Jul 09, 2020 04:29 PM

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் குறித்து  வெளியான தகவல் வதந்தி என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தீவிர பரவலால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் வெளியான தகவல் வதந்தி என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.பொதுதேர்வு முடிவு தேதி குறித்து தவறான தகவல் பரவி வருகிறது என்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc