ஆபரேசன் சக்ரா.. 105 இடத்தில் சோதனை… 1.5 கிலோ தங்கம் பறிமுதல்.! சிபிஐ அதிரடி.!

சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் 1.5 ரொக்க பணமும், 1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சிபிஐ அதிகரிகள் கைப்பற்றினர்.   

இணைய வழியில் மக்களை ஏமாற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.

அமெரிக்கவை சேர்ந்த இன்டர்போல் காவல் அமைப்பும், சர்வதேச எஃப்.பி.ஐ அமைப்பும் இந்திய அரசுக்கு கொடுத்த ரகசிய தகவலின் பேரில் சிபிஐ நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

 நாடு முழுவதும் 105 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இதுவரை 300 நபர்களை சிபிஐ கண்காணித்து வருகிறது. சோதனையின் போது ராஜஸ்தானில், 1.5 ரொக்க பணமும், 1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சிபிஐ  அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment