சிபிஐ வசமிருந்த தங்கம் மாயம்.. சுரனா நிறுவனத்தில் ரெய்டு..!

சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை

சட்ட விரோதமாக தங்கம் இறக்குமதி தொடர்பாக கடந்த 2012 சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ சோதனை செய்தனர். அந்த சோதனையில் 400.47 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு, சுரானா நிறுவனத்தில் இருந்த லாக்கரில் நகைகள் வைக்கப்பட்டு சிபிஐ அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

ஆனால்,அந்த நகையில் 103.86 கிலோ தங்கம் மாயமானதால் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வழக்கு முழுமையாக விசாரணை நடைபெறவேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்த நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan