#BREAKING: வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு தடை கோரும் வழக்கு; இன்று விசாரணை..!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 % உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று விசாணைக்கு வரவுள்ளது.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 % உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சார்ந்தவரும், சமூகநீதி பேரவையின் மாநில பொறுப்பாளருமான சின்னான்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தபொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், குடும்பகவுண்டர் சமூகத்தை சார்ந்த 30 லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள இந்த சமூகம் கல்வி, சமூக பொருளாதர ரீதியாகவும் பின் தங்கியுள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த 20% இட ஒதுக்கீட்டை 108 சமூகத்தினர் பங்கீட்டு கொள்வதால் குடும்பகவுண்டர் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதிதத்துவம் கிடைக்கவில்லை. இதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சமூகத்தினர் பாதிக்கப்பட்டதால் இதனை கருத்தில் கொண்டு கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் சாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுக்க ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் முறையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்காரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த சமூகத்தில் உள்ள 22 சாதியினருக்கு வெறும் 2.5% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

எனவே சாதிவாரி கணக்கீடு குறித்த முடிவுகள் வெளிவரும் வரை உள்ஒதுக்கீடு சட்டத்தை நிறுத்திவைக்க  வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

author avatar
murugan