தமன்னா மற்றும் பிரபல கிரிக்கெட் வீரரை கைது செய்ய கோரி வழக்கு பதிவு.! பின்னணி இதுதானாம்.!

இணைய சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவதில் தமன்னா மற்றும் விராட் கோலி

By ragi | Published: Aug 02, 2020 04:28 PM

இணைய சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவதில் தமன்னா மற்றும் விராட் கோலி நடித்ததால், அவர்களை கைது செய்ய கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை தமன்னா கடைசியாக தமிழில் விஷாலுடன் ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார் .தற்போது கங்கனா ரணாவத் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார் .ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது அடுத்து ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இவரும், பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியும் இணைந்து இணையவழி சூதாட்ட கேம்மை விளம்பரப்படுத்தியதற்காக, இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் தமன்னா மற்றும் விராட் கோலி இணைந்து நடித்த காரணத்தால் அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரிய பிரகாசம் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வருவதாக கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc