விஜய தசமியை முன்னிட்டு 14 மாவட்டங்களில் RSS பேரணி.! உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை.!

தமிழகத்தில் விஜய தசமியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் பேரணி நடத்துவதற்கு இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு, பேரணி நடத்துவதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம், RSS நிர்வாகிகள் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல்,  தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், பேரணி நடத்த நாள் நெருங்குவதால் இன்னும் அனுமதி கிடைக்கபெறாத காரணத்தால் RSS சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஆர்எஸ்எஸ் தொடக்க நாளான விஜயதமி நாளை முன்னிட்டு , வரும் அக்டோபர் 22ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், அடுத்து அக்டோபர் 29ஆம் தேதி 12 மாவட்டங்களிலும் 14 தென் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் பேரணி நடத்த அனுமதியானது காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால் காவல்துறை தரப்பில் இன்னும் அனுமதி அளிக்காத காரணத்தால், நீதிமன்றம் தலையிட்டு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் RSS சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி இளங்கோவன் தலைமையிலான அமர்வு முன்பு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று RSS பேரணி நடத்த அனுமதி கேட்டு பின்னர் தமிழக காவல் துறை மறுப்பு தெரிவித்து, பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து RSS தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு வெளியான தீர்ப்பில் RSS பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது , அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் RSS பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.