உபா சட்டத்துக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

உபா சட்டத்துக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசானது,மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உபா சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் மூலம் நாட்டிற்கு எதிராக செயல்படும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க முடியும் விசாரணை நடைபெறும் போது குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை முடக்க முடியும் என சட்டம் கொண்டுவரப்பட்டது.  இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் ஆளுங்கட்சி இச்சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த நிலையில்  தனி நபரையும் பயங்கரவாதி என மத்திய அரசு அறிவிக்க வகை செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியை சேர்ந்த சஜ்ஜல் அவஸ்தி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.