ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில்  ஓ.பன்னீர்செல்வம் அணி  சட்டசபையில்  முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.

இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று  தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர். இதன் பின் அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கு இடையில் தான் சபாநாயகர் தனபாலுக்கு முதலமைச்சர் பழனிசாமி  கடிதம் ஒன்றை எழுதினார்.அந்த கடிதத்தில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை. 11 எம்எல்ஏக்கள் மீது   நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என்று தெரிவித்துள்ளார்.எனவே சட்டப்பேரவை செயலாளர் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார் .இந்நிலையில் தான் இன்று உச்சநீதிமன்றத்தில், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு   விசாரணைக்கு வருகிறது.

Recent Posts

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

50 mins ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

56 mins ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

57 mins ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

1 hour ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

2 hours ago

‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…

2 hours ago