ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இயலவில்லை! உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!

ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இயலவில்லை! உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!

Default Image

ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இயலாத காரணத்தால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி தேவிகா. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரசின் தீவிர பரவலால், இந்தியா முழுவதும் பள்ளிகள்,  கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரளா மாநிலத்தில், கடந்த திங்கட்கிழமை பர்ஸ்ட் பெல் என்ற ஆன்லைன் வகுப்பறை திட்டத்தின் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவிகளுக்கு வசதிகள் இல்லை என கல்வி ஆர்வலர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். ஆனாலும், ஆளும் கட்சி எடுத்த இந்த முடிவு மாணவி தேவிகாவின் உயிருக்கு உலை வைத்துள்ளது. 

 கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில்  உள்ள, வசித்து வருபவர் மாணவி தேவிகா. இவர்களது குடும்பம் மிகவும் வறுமையின் உள்ளது. இவர் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஆன்லைன்  வகுப்பில் கலந்து கொல்வாதற்காக பழுதான தொலைக்காட்சியை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், அதற்கு கூட முடியாத நிலையில்,  ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத விரக்தியில், ‘நான் போகிறேன்’ என கடிதம் எழுதி வைத்து விட்டு, தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இந்த செயலால் சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள், ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டாத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், தேவிகாவின் விவகாரத்தை கேட்டு அதிர்ந்து போன, வயநாடு எம்.பி.ராகுல் காந்தி தனது தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்க அணைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Join our channel google news Youtube