இவ்வளவு சுலபமாக இடியாப்பத்தில் சிக்கன் பிரியாணி செய்ய முடியுமா!

இடியாப்பம் என்றாலே மிகவும் அட்டகாசமாக இருக்கும், அந்த இடியாப்பத்தை வைத்து சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும், வாருங்கள் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

  • சிக்கன்
  • இடியாப்பம்
  • நெய்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • எண்ணெய்
  • புதினா
  • கொத்தமல்லி
  • இஞ்சி பூண்டு விழுது
  • வெங்காயம்
  • ஏலக்காய்
  • லவங்கம்
  • பிரிஞ்சி இலை
  • உப்பு

செய்முறை

இடியாப்பம் இருக்கிறது அதை வைத்து சிக்கன் பிரியாணி செய்ய வேண்டும் என்றால் இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் சேமியா இருந்தாலும் போதும். முதலில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவை சேர்த்து வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வெங்காயம் வதங்குவதற்கு உப்பு போட்டு லேசாக வதக்கி நன்கு வதங்கி வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அதன் பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு மற்றும் சிக்கன் ஆகியவை சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி தூவி அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். சிக்கன் நன்கு வெந்த பிறகு இடியாப்பத்தை உதிர்த்து வைத்திருந்தால் இடியாப்பத்தை அதில் தூவி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் தம்  வைத்து அதன் பின் பரிமாறவும், அல்லது சேமியா வைத்து இருந்தால் முதலிலேயே லேசாக எண்ணெயில் சேமியாவை வறுத்து எடுத்து விட்டு அதன் பின் சட்டியில் உள்ள கலவையில் சேமியாவை கொட்டி நன்றாக வதக்கி முக்கால் பருவத்தில் வெந்ததும், அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடம் தம் வைத்துவிட்டு இறக்கவும். அட்டகாசமான இடியாப்பம் சிக்கன் பிரியாணி வீட்டிலேயே தயார்.

author avatar
Rebekal