கைலாசத்துக்கு விசா கிடைக்குமா.? நித்தியானந்தாவை கலாய்த்த இந்திய கிரிக்கெட் வீரர்..!

கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் நித்தியானந்தாவின் புதிய தீவை பற்றி கேளிகளும், கிண்டல்களும் வந்த வண்ணமிருந்தனர். இந்நிலையில் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என இந்துக்களுக்கான ஒரு நாடாக நித்தியானந்தா அதனை உருவாக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தாவின் தனி நாடு என கூறப்படும் கைலாஸாவில் விசா வாங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் செய்த ட்வீட் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டிற்கு எப்படி விசா வாங்குவது என அஸ்வின் கேட்டுள்ள ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கைலாஸாவில் விசா பெறுவதற்கான நடைமுறை என்ன ?? என அவர் போட்டுள்ள அந்த பதிவிற்கு பலரும் பலவிதமான பதில்களை அளித்து வருகின்றனர்.

மேலும், இந்த ட்வீட்டிற்கு நான் சொல்கிறேன் பக்தா என்று தமிழக நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆன்மீகவாதி போல வேடமிட்ட புகைப்படத்துடன் கிண்டலாக ரிப்ளை செய்துள்ளார். இந்த ட்வீட்டும், ரிப்ளையும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்