சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேர் கைது.!19,500 பதிவுகள் மீது பாய்கிறது நடவடிக்கை

  • குடியுரிமை சட்டம் தொடர்பான போராட்டத்தின் போது சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேர் கைது
  • 19,500 சமூக வலைதள பதிவுகள் மீது பாய்கிறது  நடவடிக்கை

குடியுரிமை சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு தற்போது சட்டமாகி உள்ளது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது.மேலும் மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து பேரணி மற்றும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் கலவரமாக மாறி இரயில் மற்றும் பேருந்துகள் தீயிட்டு கொழுத்தப்பட்டது.இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தற்போது நிலைமை சீராகி வருவதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் குடியுரிமை சட்டம் தொடர்பாக போராட்டம் வெடித்து கொண்டிருக்கும் போது சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேரை உத்திரபிரதேச போலீசார் கைது செய்து உள்ளனர்.மேலும் 19,500 சமூக வலைதள பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.ஒரு சில தினத்திற்கு முன்னர் தான் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திவர்களின் சொத்துக்களை உத்திர பிரதேச போலீசார் முடக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

author avatar
kavitha